முகப்பு /தென்காசி /

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தென்காசி குழந்தைகள் எப்படி படிக்கிறாங்கன்னு தெரியுமா?

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தென்காசி குழந்தைகள் எப்படி படிக்கிறாங்கன்னு தெரியுமா?

X
எண்ணும்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தென்காசி குழந்தைகள் எப்படி படிக்கிறாங்கன்னு தெரியுமா?

Ennum Ezhuthum | எண்ணும் எழுத்தும் திட்டத்தில் தென்காசி மாவட்ட சிறுவர்கள் ஆர்வத்துடன் கற்று திறமையை வளர்த்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

'எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்' என்பதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை வாயிலாக கல்வியை கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை வாயிலாக கல்வியை கற்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், எண்களையும் எழுத்துக்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் விதத்தில், செயல்முறைகளில் குழந்தைகள் ஈடுபடுவதன் மூலம் எளிதில் அடிப்படை கல்வியான எண்களையும் எழுத்துக்களையும் ஞாபகம் வைத்துக் கொள்கின்றனர்.

எண்ணும் எழுத்தும் திட்டம் பள்ளியில் எப்படி கற்பிக்கின்றனர் என்று தெரிந்து கொள்வதற்காக நாம் சென்ற பள்ளி தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளத்தில் இருக்கும் டிடிஏ பள்ளி. நாம் சென்றபோது வகுப்பு முழுக்க வண்ண வண்ண சாட் பேப்பர்களால் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஏடுகளை பார்க்க முடிந்தது. அனைத்து பலகைகளிலும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய பாடத்திட்டத்தை செயல்முறைப்படுத்தி காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க : அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

மேலும், அந்த வகுப்பறையில் ரீடிங் கார்னர், ஆர்ட் அண்ட் கிராப்ட் கார்னர், என் மேடை என் பேச்சு போன்றவைகளுக்கென தனித் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஏணி போல் செய்து வைக்கப்பட்டு இருக்கும் ஒன்று இரண்டு வரிசைகள், விலங்கின் மாஸ்குகள், வேர்ட் வால், டாக்டர், டிரைவர், சோல்ஜர் போன்ற துறைகளுக்கு என தனித்தனியான விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. மேலும் வண்ண வண்ண நிறங்களில் வகுப்பில் இருக்கும் குழந்தைகளின் கை அச்சுக்களும் பதித்து வைக்கப்பட்டிருந்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்ட பேப்பர் கப்புகள், பாட்டிலின் மூடியினால் எழுத்து உருவாக்கம் செய்வதற்கான செயல்முறை பலகைகள், என பலவகையான செயல்முறைகள் சார்ட்டில் வரைந்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும், குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்க தொடங்கி விட்டனர் என்றும் பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi