ஹோம் /தென்காசி /

ஐந்து தலை கோப்ரா போன்ற ஐந்தருவி.. தென்காசியில் அதிகம் பேர் வருவதன் ரகசியம்...

ஐந்து தலை கோப்ரா போன்ற ஐந்தருவி.. தென்காசியில் அதிகம் பேர் வருவதன் ரகசியம்...

ஐந்தருவி

ஐந்தருவி

Tenkasi District News : இந்துக்கள் நம்பிக்கை படி ஐந்து தலை கொண்ட கோப்ரா பாம்பு போல ஐந்தருவி நம்பப்படுகிறது. மற்ற அருவிகளை காட்டிலும் அதிக சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கே வருகை தருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • tenkasi, India

  குற்றால அருவிகளில் மிக முக்கியமான அருவி மற்றும் அதிக மக்கள் வரும் அருவியாக கருதப்படுவது குற்றால ஐந்தருவி ஆகும். இயற்கையாக வளர்ந்த மூலிகைகளில் அடித்து வரப்பட்ட தண்ணீர் எம்பத்தால் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

  ஐந்தருவியில் ஐயப்பன் கோயில், விநாயகர் கோயில், அய்யனர் சாஸ்தா கோயில் மற்றும் முருகன் கோயில் இருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. இந்த அருவி திரிகூடமலையில் இருந்து வரும் மூலிகை நிறைத்த அருவியாகும்.

  ஐந்தருவியின் மூலிகை தண்ணீர் ஐந்து பிரிவுகளாக பிரிந்து வருவதால் இதற்கு ஐந்துஅருவி என்று பெயர்பெற்றது. ஐந்து அருவி விழுவது ஆதிசேஷா போல காட்சியளிக்கிறது. ஆதிசேஷா என்பது ஒரு பாம்பு வகையாகும். ஹிந்துக்கள் நம்பிக்கை படி ஐந்து தலை கொண்ட கோப்ரா பாம்பு போல ஐந்தருவி நம்பப்படுகிறது.

  ஐந்தருவி

  இதையும் படிங்க : தென்காசியில் சுயம்பு சிவன் அமைந்த குற்றாலநாதரின் சிறப்புகள் தெரியுமா?

  மற்ற அருவிகளை காட்டிலும் அதிக சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கே வருகை தருகின்றனர். ஐந்தருவி குற்றாலத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு என தனி தனியாக குளிப்பதற்கு எதுவாக விழும் அருவிகளின் குறுக்கே தடுப்புகள் வைக்கப்பட்டு இருக்கும்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  ஐந்தருவி

  லாக்கர் வசதியும் செய்யப்பட்டு இருக்கும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ற வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். மேலும், சுற்றுலா பயணிகள் உடை மாற்றுவதற்கு தனித்தனி அறைகள் வசதியும் இருக்கும்.

  தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi