தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் தொடர் பரப்புரை பயணம், வரவேற்பு பொதுக்கூட்டம் வடக்கு ரதவீதியில் நடைபெற்றது. இதற்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பஜனை பாடி போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது கீழ ரத வீதியில் கட்டப்பட்டிருந்த தி.க.கொடிகளை அகற்ற கூறினர். இதனால் போலீசாருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக துரத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது.இருப்பினும் இந்து அமைப்பினர் கோவிலுக்குள் அமர்ந்து பஜனை பாடல்களை பாடி வந்தனர் இதனைத் தொடர்ந்து திருக்கோவில் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்
இந்நிலையில் இந்து அமைப்பினர் தாங்கள் சஷ்டி தினம் என்பதால் நான்கு ரத வீதிகள் பக்தி பாடல்கள், பஜனை பாடல்கள், பாடி வீதி உலா செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மறுத்த காவல்துறை இந்து அமைப்பினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும் தி.க. தலைவர் வீரமணி பேசுகின்ற பொதுக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா, ஓம் நமச்சிவாயா, ஹர ஹர நமச்சிவாயா, என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு இந்து அமைப்பினர் கோயில் முன் மண்டபத்தில் அமர்ந்து நீண்ட நேரம் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
இச்சம்பவத்தில் 72 ஆண்கள் ஒரு பெண் என 73 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுவாமி சன்னதி முன்பு போர்க்களம் போல் காட்சி அளித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Protest, Sankarankovil Constituency, Tenkasi