முகப்பு /தென்காசி /

திடீரென மாறிய வானிலை.. சங்கரன்கோவிலில் இடி, மின்னலுடன் கனமழை..

திடீரென மாறிய வானிலை.. சங்கரன்கோவிலில் இடி, மின்னலுடன் கனமழை..

X
சங்கரன்கோவிலில்

சங்கரன்கோவிலில் இடி, மின்னலுடன் கனமழை

Heavy Rain In Sankarankovil | தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டு மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது. காலையில இருந்து மிதமான வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 2 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் இளம் திருவேங்கடம் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ள நீரானது தாழ்வான பகுதியில் உள்ள கடைகளில் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியது. சங்கரன்கோவில் மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக இருக்கும் திருவேங்கட சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், சங்கரன் கோவிலில் கனமழை பெய்த காரணத்தினால் முப்புடாதி அம்மன் கோயிலின் உள்ளே தண்ணீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் வருவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Tenkasi, Weather News in Tamil