ஹோம் /தென்காசி /

கைகூப்பி வணங்கும் 1.5 அடி உயர ஆஞ்சநேயர்... தென்காசியில் பிரபலமான கோயில்..

கைகூப்பி வணங்கும் 1.5 அடி உயர ஆஞ்சநேயர்... தென்காசியில் பிரபலமான கோயில்..

தென்காசி

தென்காசி

Tenkasi District News : மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கேற்ப தென்காசி அனுமந்தபுரியில் 1.5 அடியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் அனுமந்தபுரி என்ற பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோயில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.

வன்னிக்கோனேந்தல் மற்றும் ஊத்துமலை கிராமங்களின் மலை அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

முன்னொரு காலத்தில் இந்த மலை அடிவாரத்தில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் 1.5 அடியில் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை சித்தர்கள் பிரதிஷ்டைசெய்து வணங்கி வந்துள்ளனர்.

அவர்கள் பிரதிஷ்டை செய்த சிலை தான் இந்த ஆஞ்சநேயர் சிலை என்று செவி வழி தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு கைகளை கூப்பி ஆஞ்சநேயர் வணங்குவது போல இங்கு சிலை அமைந்திருக்கிறது. அநேக கோயில்களில் ஆஞ்சநேயர் கைதூக்கி ஆசி வழங்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க : தென்காசி : காசி விஸ்வநாதர் கோயில் முன் மாணவிகள் பேரணி

ஆனால் வெகு சில கோயில்களில் மட்டுமே ஆஞ்சநேயர் இரு கைகூப்பி வணங்கும் நிலையில் சிலை அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்த கோயிலில் கைகூப்பி வணங்கும் நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளதால் இந்த கோயிலின் எதிரே சில வருடங்களுக்கு முன்னர் ராமர், சீதை சிலைகள் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த ராமர் சிலைக்கு பயன்படுத்திய மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது மேலும் சிறப்பாகும்.

சன்னதியில் முன் வாசலில் இருபுறமும் அமைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு குடுமி இருக்கிறது. ஆஞ்சநேயர் வால் மற்றும் மணிகள் அணிந்திருப்பதை அதிக கோவில்களில் பார்த்திருக்க முடியும்.

ஆனால் குடுமி இருப்பது இங்கு மட்டும் தான். அதன் அருகில் ஆஞ்சநேயர் தூக்கி சென்றதாக கூறப்படும் சஞ்சிவி மலை போன்ற ஒரு அமைப்பும் உள்ளது. இது ஊத்துமலை ஜமீனுக்கு சொந்தமான கற்கள் மூலம் மலை போன்ற அமைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

1.5 அடியில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயரை வணங்குவதால் வேலைவாய்ப்பு, கடன்தொல்லை நீங்குவதாக இந்த பகுதி மக்களின் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்றும், மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்றும் மிக விமர்சியாகபூஜைகள் நடைபெறுவது வழக்கம். அனைத்து நாட்களிலும் கோயில் திறந்திருக்கும்.

சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலையில் பூஜையும்நடைபெறும். சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி அளவில் சிறப்பு பூஜைகள் அன்னதானமும் வழங்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெண்ணைக்காப்பு, வடமலை, வெற்றிலை, துளசி மாலை, பழமலை அணிவித்து ஆஞ்சநேயரைவணங்குவது நன்மை பயக்கும் என்றும் இதன் மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும் என்றும் அதேபோல் வேலை வாய்ப்பு உடனடியாக கிடைக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi