முகப்பு /தென்காசி /

30 ரூபாயில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்..! தென்காசியில் ஒரு நாள் ட்ரிப்புக்கு சூப்பர் ஸ்பாட்..!

30 ரூபாயில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்..! தென்காசியில் ஒரு நாள் ட்ரிப்புக்கு சூப்பர் ஸ்பாட்..!

X
மாதிரி

மாதிரி படம்

Gurusamy Kinaru | கோடை கால விடுமுறையை களிக்க தென்காசி மாவட்டத்தில் குளிர்ச்சியான இந்த செமயான ஸ்பாட்டை நீங்க தேர்ந்தெடுக்கலாம்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட மக்கள் கோடை கால விடுமுறையில் இப்படி குற்றால அருவி வற்றிபோய்விட்டதே என கவலையில்  உள்ளனர். அதற்கு ஒரு பெஸ்ட் சொல்யூஷன் தான் புளியங்குடி தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் இந்த குழு குழு ஸ்விம்மிங்பூல் மற்றும் அருவி செட்டப்.

30 ரூபாய் போதும்..

இந்த கோடை காலத்தில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ஒரு நாள் ட்ரிப்புக்கு பிளான் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பெஸ்ட் ஸ்பாட்டா இந்த புளியங்குடி இருக்கும். இங்கே, வெறும் 30 ரூபாய்க்கு எத்தனை மணி நேரம் வேணாலும் குடும்பத்தோட அல்லது நண்பர்களோட அடிக்குற வெயிலுக்கு குளுகுளுன்னு ஒரு குளியல் போடுறதுக்கு ஒரு பெஸ்ட் ஸ்பாட்.

புளியங்குடி குருசாமி கிணறு நேச்சுரல் ஃபால்ஸ்

எப்படி செல்ல வேண்டும்?

புளியங்குடிக்கு போற வழி மேற்கு தொடர்ச்சி மலையை பார்த்தபடி 2 புறமும் பச்சை பசேலென இருக்கும் வயல்களையும், மரத்தினாலேயே குகை மாதிரி அமைந்திருக்கும் சாலைகளையும் பார்க்க முடியும். புளியங்குடியில் பிரதான சர்ச்சுக்கு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் வயல்களுக்கு நடுவில் பயணம் செய்தால் இந்த இடத்துக்கு சென்றுவிடலாம். கூகுளில் மேப் போட்டு போறீங்க அப்படின்னா புளியங்குடி குருசாமி கிணறு நேச்சுரல் ஃபால்ஸ் அப்படின்னு லொகேஷன் போட்டு போங்க.

இயற்கையான சூழல்

போற வழி முழுக்க ஒத்தையடி பாதை மாதிரி தான் இருக்கும். சாலைகள் முடிஞ்சு மண் ரோட்டில் பயணம் செய்தால் தான் இந்த இடத்துக்கு போக முடியும். சுற்றிலும் வயல்கள் மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவில் அந்த ஸ்விம்மிங்பூல் அமைந்திருக்கிறது. அதுவே ஒரு நேச்சுரலான ஒரு சில கிடைக்குது. இங்கே பார்கிங்க்கு எந்தவித கட்டணமும் கிடையாது. குளிக்கிறதுக்கு ஒரு நபருக்கு 30 ரூபாய் விதம் வசூல் பண்றாங்க. எந்தவித நேர வரம்பும் இதுல கிடையாது. எவ்வளவு நேரம் வேணாலும் நாள் முழுக்க நம்ம பிரெண்ட்ஸ் கூட, ஃபேமிலியோட இங்க குளிச்சு என்ஜாய் பண்ணலாம்.

இதையும் படிங்க : ஈரோடு அருகே இப்படி ஒரு அருவி இருக்கா? கோடை காலத்தை கழிக்க சூப்பர் ஸ்பாட்!

சூப்பர் செட்

குறிப்பிட்ட நேர இடைவெளியில இந்த அருவி மாதிரி செட் பண்ணி இருக்கிற இடத்திலையும் தண்ணீர் விழற மாதிரி பண்ணி இருக்காங்க. இது குற்றாலத்தை மிஸ் பண்றவங்களுக்கு ஒரு நல்ல ஸ்பாட்டாவே இருக்கும். மேலும், இங்கே பெண்கள் ஆண்களுக்கு தனித்தனியான சுத்தமான உடைமாற்றும் இடமும் உள்ளது. இந்த இடத்தில் இருந்து நீங்க மலைகளை பார்த்தபடி அடிக்கிற வெயிலுக்கு குளு குளுனு குளிச்சு என்ஜாய் பண்ணலாம்.

இந்த இடம் 360 டிகிரி சுற்றி வயல்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால் இயற்கையாகவே இந்த இடம் கொஞ்சம் குளுமையாவே அமைந்துள்ளது. குளித்துவிட்டு இருக்கும்போதே பசியெடுத்தால் கவலைப்பட வேண்டாம். இவங்களே ஒரு கடை போட்டு இருக்காங்க. அங்கு சிப்ஸ், பன் என்று எல்லாமே விற்பனை செய்கின்றனர். அதுவும் 10 ரூபாய்க்கு தான்.

போதும் போதும் என்ற அளவுக்கு இந்த இடத்துல குளிச்சு முடிச்சுட்டு இதோட இந்த ட்ரிப் முடிவதில்லை. புளியங்குடி ஃபேமஸ் வெள்ளை துரை ஹோட்டல் புரோட்டாவ பிச்சுப்போட்டு 2 வகை சால்னாவை ஊத்தி கலக்கியோட அவங்க நல்லெண்ணெய்ல பூண்டு எல்லாம் போட்டு செஞ்ச தொக்க தொட்டு சப்டுறதுகே வெற லெவல்ல இருக்கும். நீங்க தென்காசி சுற்றுப்புற பகுதியிலிருந்து உங்க குழந்தைகளோட கூட விடுமுறையை வெறும் 50 ரூபாயில் முடிச்சிடலாம்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tenkasi, Travel