முகப்பு /தென்காசி /

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்..

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்..

X
தென்காசியில்

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

Tenkasi Collector : தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்று திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ரூ.4,50,000 மதிப்பீட்டில் மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலி வண்டிகள் நான்கு பேருக்கும், மேலும் ரூ.35,000 மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் 4 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின்போது மாற்று திறனாளிகள் கொண்டு மனுக்களை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மாற்று திறனாளிகள் அமர வைக்கப்பட்ட இடத்திற்கே சென்று மனுக்களை பெற்று கொண்டார்.

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

இக்கூட்டத்தில் மொத்தம் 93 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் கவிதா, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi