காஷ்மீர் ரோஸ், பன்னீர் ரோஸ் , ஊட்டி ரோஸ் மற்றும் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், கீரை என காய்கறிகள் போன்றவற்றை தனது மாடி தோட்டத்தில் பயிரிட்டு அசத்தி வருகிறார் எம் பி ஏ பட்டதாரி பெண் இந்திரா .
செடிகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ள இந்திராவுக்கு இடப்பற்றாக்குறை தான் ஒரு தடையாக இருந்துள்ளது. அதற்கு அவருக்கு கிடைத்த ஒரு தீர்வு தான் மாடி தோட்டம். மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டிய இந்திரா தனது மொட்டை மாடியை ஒரு நந்தவனமாக இன்று மாற்றியுள்ளார்.
பக்கத்து வீடுகளுக்கு காய்கறி விற்பனை
25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இந்த மாடி தோட்டத்தை அமைத்ததாகவும் தற்போது வரை இரண்டு அறுவடை முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார். தனது வீட்டிற்கு செலவாகும் காய்கறிகளை தவிர்த்து மற்ற காய்கறிகளை அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்து வருகின்றார்.
மாடி தோட்டத்தில் காய்கறிகள் வளர்த்து விற்பனை செய்து வருபவர்கள் அதிகம். ஆனால் இந்திரா காய்கறிகள் மட்டுமல்லாமல் ரோஸ் செடிகளையும் 120 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றார். மேலும் ரோஸ் செடிகள் பராமரிப்பது அதற்குப் போட வேண்டிய உரம் பற்றி இந்திராவிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.
ரோஜா செடிகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் விடுவதை போதுமானதாகும். ஈரப்பதம் இருந்தால் தண்ணீர் விட தேவை இருக்காது. ரோஜா செடி மண் காய்ந்து இருந்தால் மட்டுமே தண்ணீர் விட வேண்டும். எந்தவித செயற்கை உரங்களும் ரோஜா செடிக்கு பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் அது மண்ணை மலடாக்கும் என்று கூறினார் இந்திரா.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi