முகப்பு /தென்காசி /

தேசிய வாக்காளர் தினம்- தென்காசியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசுத் துறை ஊழியர்கள்

தேசிய வாக்காளர் தினம்- தென்காசியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசுத் துறை ஊழியர்கள்

உறுதிமொழி எடுக்கும் மாணவர்கள்

உறுதிமொழி எடுக்கும் மாணவர்கள்

Tenkasi | தென்காசியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களும், மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 13வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தென்காசி மாவட்டத்தில், வாக்காளர் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

மேலும், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற ரங்கோலி போட்டி, சுவர் இதழ் மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டி பாட்டுப் போட்டி, வினாடி-வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப்போட்டிகளில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவி, மாணவியர்களுக்கு பரிசுகள், பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்கள் முதலியன வழங்கப்பட்டன.

மேலும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்கான ரங்கோலி போட்டியில் மாநில அளவில் தென்காசி வட்டம் காசிமேஜர் ஊராட்சி ஸ்ரீ அம்மன் மகளிர் சுய உதவிக் குழு முதல் பரிசு பெற்றுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பிரமிடு, வில்லிசை, கிராமிய நடனம்.. தென்காசியில் குடியரசு தின கொண்டாட்டம் (புகைப்படங்கள்)

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தனி வட்டாட்சியர்திருஷ்கிருஷ்ணவேல், தனித்துணை வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi