தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்,சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 14 பள்ளி விடுதிகளும், மாணவியர்களுக்கு 8 பள்ளி விடுதிகளும் மற்றும் மாணவர்களுக்கு 5 கல்லூரி, ஐடிஐ விடுதிகளும், மாணவியர்களுக்கு 2 கல்லூரி விடுதிகளும் ஆக மொத்தம் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில், ஐடிஐ விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவர், மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் என கருதப்படுகிறது.
அரசு விடுதியில் வழங்கப்படும் சலுகைகள்:
அனைத்து விடுதி மாணவர், மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்,மாணவியருக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும்.10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர், மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் :
பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டார்க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.06.2023-க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை.விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயன் அடைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi