ஹோம் /தென்காசி /

“வீட்டு வேலைகளை பெண்களும், ஆண்களும் சமமாக பகிர்ந்து கொள்வோம்” - தென்காசியில் உறுதிமொழி ஏற்பு

“வீட்டு வேலைகளை பெண்களும், ஆண்களும் சமமாக பகிர்ந்து கொள்வோம்” - தென்காசியில் உறுதிமொழி ஏற்பு

தென்காசியில் உறுதிமொழி ஏற்பு

தென்காசியில் உறுதிமொழி ஏற்பு

Tenkasi District News : சர்வேதச பெண்களுக்கான வன்கொடுமை ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மேலகரம் முதல் நிலை பேரூராட்சியில், துப்புரவு பணியாளர்களால் பாலின சமத்துவ உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

சர்வதேச பெண்களுக்கான எதிரான வன்கொடுமை ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் தினம் ஆகியவற்றை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மேலகரம் முதல் நிலை பேரூராட்சியில், துப்புரவு பணியாளர்களால் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன் ஸ்டாப் சென்டர் செயல்பாடுகள், 181 எண் பற்றிய விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

பாலின சமத்துவம் குறித்தும் எடுக்க உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது. அதன்படி “ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் எவ்வித பாகுபாடும் இன்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை பெண்களும், ஆண்களும் சமமாக பகிர்ந்து கொள்வோம்,

இதையும் படிங்க : தென்காசியில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை.. கலெக்டர் எச்சரிக்கை..

பெண்கள் விரும்பும் உயர்கல்விக்கு ஊக்குவிப்போம், அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம், பெண்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதை ஊக்குவிப்போம், அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புன்மடுவதை அனுமதியோம்,

அனைத்து செயல்பாடுகளிலும் பெண்கள் சமமாக இருப்பதை உறுதி செய்வோம்” என்று அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் தென்காசி சேர்மன் கிருஷ்ணவேணி, ஓன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, வழக்கு பணியாளர் மோனிகா ஆகியோர் பங்கேற்றனர். இதை வார்த்தைகளோடு நில்லாமல் வாழ்க்கையிலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பேசிய மகளிரின் வார்த்தைகளையும் நம்மால் கேட்க முடிந்தது.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi