தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாடியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஸ்நாபக அந்தோணி தலைமை வகித்த மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துலெட்சுமி மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கிராமசபைக் கூட்டத்தில் வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மரக்கன்று நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராமசபைக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் "எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்" என்ற உறுதிமொழி மற்றும் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
மேலும் தொழிலாளர்களை கௌரவிக்கப்பட்டது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) மூலம் ஆவாஸ் பிளஸ் திட்ட பயனாளி கே.சின்னதங்கை என்பவருக்கு ரூ.50,000 காசோலை வழங்கப்பட்டது. ஊராட்சியில் உள்ள 3 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்பட்டது. தொழிலாளர் தினம் என்பதனால் சுயஉதவிக் குழு மூலம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான வெற்றிப் பெற்ற நபர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II 2023-2024 சுகாதாரம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் மற்றும் பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுப்பதன் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒரு தனித்துவமான முயற்சியாக 'நம்ம ஊரு சூப்பரு' பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச் சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், 'நம்ம ஊரு சூப்பரு' (Namma Ooru Superu) பிரச்சாரம் கிராமப்புற சமூகத்தினரிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நடத்தை மாற்றத்தை கொண்டு வர இரண்டாம் கட்டமாக 2023 மே 1 முதல் 2023 ஜூன் 15 வரை மீண்டும் 'நம்ம ஊரு சூப்பரு' பிரச்சாரம் தொடங்கப்பட்டு வாடியூர் ஊராட்சியில் தெருக்களில் 'நம்ம ஊரு சூப்பரு' நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நடைபயணத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைக்கான கூடை வழங்கப்பட்டு பிரித்து வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
கிராம ஊராட்சிகளிலுள்ள மனித வளம் மற்றும் பிற வளங்களின் இருப்பு அடிப்படையில் உரிய வழிகாட்டுதல்களின் படி திட்ட செயல்பாட்டிற்கான செயல் திட்டம் தயாரிக்கவும், மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRD/ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) உறுப்பினர்கள் மற்றும் இதர களப்பணியாளர்களுக்கு பிரச்சாரம் மற்றம் அதன் நோக்கங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.
நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்களை பொது மக்களுக்கு தெரிவிக்கவும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் அடையாள அட்டை இல்லாத அனைவருக்கும் இத்திட்டத்தில் பதிவு செய்ய பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டது.
மேலும் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு-
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi