முகப்பு /தென்காசி /

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் இலவச பயிற்சி வகுப்பு!

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் இலவச பயிற்சி வகுப்பு!

இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு

Tenkasi News : தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசுபோட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். வாயிலாக நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழ்காணும் லிங்க் மூலம் https://bit.ly/3NDhU95 தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து இணைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்த பின்பு, தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். வாயிலாக TNPSC SSC TNUSRB ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tenkasi