ஹோம் /தென்காசி /

தென்காசியில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.. கலெக்டர் அறிவிப்பு..

தென்காசியில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.. கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி கலெக்டர்

தென்காசி கலெக்டர்

Tenkasi District News : தென்காசியில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நாளை முதல் தொடங்குகிறது. இதில் மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சக்தி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அனைத்து மத்திய மற்றும் மாநில போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது SSC, CHSL, தகுதித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அலுவலக வளாகத்திலேயே அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நேரடியாக நாளை முதல் தொடங்கப்பட உள்ளது .

மேலும் இந்த பயிற்சியில் மாதிரி தேர்வுகள், துறை சார்ந்த வல்லுநர்களின் ஊக்க உரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தென்காசி: மாணவனுக்கு கட்டாயப்படுத்தி போதைப் பொருள்.. பேருந்துக்குள் மயங்கிய சிறுவன்!

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

First published:

Tags: Local News, Tenkasi