முகப்பு /தென்காசி /

தென்காசியில் இலவச போட்டி தேர்வு வகுப்புகள்.. எப்படி அப்ளை பண்ணனும் தெரியுமா?

தென்காசியில் இலவச போட்டி தேர்வு வகுப்புகள்.. எப்படி அப்ளை பண்ணனும் தெரியுமா?

மாதிரிபடம்

மாதிரிபடம்

Tenkasi News | போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முற்றிலும் இவைச பயிற்சி வகுப்புகள் வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அஞ்சல், முகமதியா நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும்,தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்திய இராணுவத்திற்கான அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படவுள்ள இராணுவப்பணியிடங்கள்,மத்திய துணை ராணுவப்படையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பணிகள், தலைமை காவலர் பணி, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படவுள்ள சார்பு ஆய்னாளார் பணிகள் மற்றும்இரண்டாம் நிலை காவலர் ஆகிய பணியிடங்களுக்கு இவைச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படுகின்றன.

இந்த பயிற்சிகள் 20.04.2023 முதல் அலுவலகத்தில் வைத்து நடத்தப்படுகிறது. போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் இவைசபயிற்சி வகுப்புகளாகும். வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறன.

ALSO READ | சங்கரன்கோவிலில் தண்ணீர் குழாயில் உடைப்பு.. ஒரு அடிவரை பள்ளமான தார் சாலை..

மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட haps tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மேற்காணும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 8381552624 என்ற தொலைபேசி லாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Exam, Local News, Tenkasi