முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்! - 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சங்கரன்கோவிலில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்! - 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

X
Free

Free medical camp 

Thenkasi News|தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

சங்கரன் கோவிலில் நடைபெற்ற இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் பரிசோதனைக்கு வந்தவர்களை மருத்துவர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.

பரிசோதனை செய்யப்பட்ட நபர்களில் 4 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோயும், 2 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த புற்றுநோய் கண்டறியும் முகாம் அரசு மருத்துவமனை மருத்துவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த முகாமை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா தலைமையில் மருத்துவ அலுவலர் செந்தில்சேகர், நகர் மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi