முகப்பு /செய்தி /தென்காசி / இலவச பேருந்து திட்டத்தால் வருவாய் இழப்பு... தென்காசி ஆட்சியர் கருத்தால் சலசலப்பு..!

இலவச பேருந்து திட்டத்தால் வருவாய் இழப்பு... தென்காசி ஆட்சியர் கருத்தால் சலசலப்பு..!

 இலவச பேருந்து பயண திட்டம்

இலவச பேருந்து பயண திட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூரில் தொழிலாளர் நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூரில் தொழிலாளர் நாளை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஸ்நாபக அந்தோணி, கடந்த 40 ஆண்டு காலமாக தென்காசியில் இருந்து தடம் எண் 13 என்ற பேருந்து தங்களது ஊருக்கு வந்து கொண்டிருந்ததாகவும், தற்போது அந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் வாசிக்கநீங்கியது தடை... குற்றாலத்தில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

இதனால், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு செல்ல முடியாமல், தற்போது பீடி சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

top videos

    இதன்காரணமாக, கிராமப் புறங்களுக்கு பேருந்து சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி தடம் எண் 13 பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    First published:

    Tags: Tenkasi