ஹோம் /தென்காசி /

விவசாயிகளுக்கு ஆதாயம் தரும் தென்காசியின் முக்கிய அணை நிரம்பியது

விவசாயிகளுக்கு ஆதாயம் தரும் தென்காசியின் முக்கிய அணை நிரம்பியது

குண்டாறு அணை

குண்டாறு அணை

Tenkasi district | தென்காசியில் முக்கிய அணையாக கருத்தப்படும் குண்டாறு அணை நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது குண்டாறு அணையாகும்.

இந்த குண்டாறு அணையை நம்பி அப்பகுதி விவசாயிகள் சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் குண்டாறு அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும்.

அதன்படி, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்கள் வரை குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியிருந்ததால் உபரிநீர் கிட்டத்தட்ட 122 நாட்கள் வரை வழிந்தோடியது.

அணையில் இருந்து வெளியேறும் நீரால், செங்கோட்டை பகுதியில் நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைகின்றனர்.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இதன்மூலம் 11 குளங்கள் நிறைந்ததால் கார் பருவ சாகுபடி சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது. பின்னர் மழை குறைந்ததால், அணையில் தண்ணீரின் இருப்பும் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த அணை நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரிநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பிசான சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தென்காசி மாவட்ட அணைகளான கடனாநதி அணை நீர்மட்டம் 62.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 140 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 67.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 45 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 50.20 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 25 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 83.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கன அடியாகவும் உள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Dams, Local News, Tenkasi