ஹோம் /தென்காசி /

வேலை தேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி...! தென்காசி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்..!

வேலை தேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி...! தென்காசி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்..!

கலெக்டர் ஆகாஷ்

கலெக்டர் ஆகாஷ்

Tenkasi District News : தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக  வேலைவாய்ப்பு முகாம்  நாளை (16-12-2022) நடைபெறுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நாளை (16-12-2022) நடைபெறுகிறது.

காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க : குற்றால அருவிகளில் குளிக்க முடியுமா... தற்போதைய நிலவரம் என்ன?

அதேபோல் முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ் விதத்திலும் பாதிக்கப்படாது” எனவும் கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

First published:

Tags: Jobs, Local News, Tenkasi