ஹோம் /தென்காசி /

சங்கரன்கோவிலில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக 62,000 கேக்குகளை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ ராஜா

சங்கரன்கோவிலில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக 62,000 கேக்குகளை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ ராஜா

X
கேக்குகள்

கேக்குகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 192 தேவாலயங்களுக்கு 62,000 கேக்குகளை தி.மு.க எம்.எல்.ஏ ராஜா வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேவாலயங்களில் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 192 தேவாலயங்களில் சுமார் 62,000 கேக்குகளை  தென்காசி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜா வழங்கினார்.

மேலும் பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதுகுறித்து பேசிய எம்எல்ஏ ராஜா, ‘இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை உங்களோடு மக்களோடு மக்களாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டேன்’ என்று தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேவாலயங்களில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை முடிவடைந்த பிறகு இனிப்புகள் மற்றும் கேக்குகளை எம்எல்ஏ ராஜா வழங்கினார். மேலும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள 50 நபர்களுக்கு மேல் வழிபடக்கூடிய அனைத்து தேவாலயங்களுக்கும் கேக்குகள் அனுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய கழகச் செயலாளர் பெரியதுரை சங்கரன்கோவில் நகரக் கழக செயலாளர் பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Christmas, Local News, Tenkasi