ஹோம் /தென்காசி /

கூடைப்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் கலக்கும் தென்காசி மாற்றுத்திறனாளி மாணவி கனகலட்சுமி..

கூடைப்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் கலக்கும் தென்காசி மாற்றுத்திறனாளி மாணவி கனகலட்சுமி..

X
தென்காசி

தென்காசி

Tenkasi Kanaga Lakshmi Story : சர்வதேச அளவில் நடைபெற்ற நான்கு சக்கர கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீராங்கனை கூலித் தொழிலாளியின் மகள் கனகலட்சுமி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்துபோட்டி முதல் முறையாக இந்தியாவின் நொய்டாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஒரே பெண் வீராங்கனை தென்காசி மாவட்டத்தைசேர்ந்த கனக லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், போன்ற பிற மாநிலத்தவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரே பெண்ணாக கனக லட்சுமி சர்வதேச 4 சக்கர கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

கனகலட்சுமி பிறப்பிலிருந்து கால்கள் குறைபாடுடன் பிறந்து உள்ளார் மேலும் அவர் தந்தை கூலித்தொழில் செய்தே அவரை படிக்க வைத்து வந்தார். மேலும் அவருக்கு இரண்டு தம்பிகளும் இருக்கின்றனர். கனக லட்சுமியின் தம்பிகள் தான் அவரை சிறுவயதிலிருந்தே பள்ளிக்கு தூக்கிச் சென்று வந்தனர்.

இதையும் படிங்க : பெற்றோர் கண்முன் குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட 4 வயது பெண் குழந்தை... மீட்கப்பட்டது எப்படி..?

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் படித்தபோது நான்கு சக்கர கூடை பந்தை பற்றி கனகலட்சுமி தெரிந்து கொண்டார். ஆரம்ப காலத்தில் தன்னால் அவ்வளவு உயரத்தில் இருக்கும் கூடையில் பந்தை போட முடியாது என்று எண்ணி வந்தார். ஆனால் அவரின் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஊக்கத்தினால் அவர் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்.

பின்னர் கடுமையான முயற்சி மற்றும் பயிற்சி காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் அளவுக்கு அவரின் திறமையை மேம்படுத்தினார்.

இந்த சாதனையை நிகழ்த்தியது எப்படி என்பது குறித்து கனகலட்சுமியிடம் கேட்டபோது, “எனக்கு சொந்த ஊரு தென்காசி மாவட்டம் இலஞ்சி. சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனை நான். மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளேன்.

பல தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளேன். இந்த ஆண்டு(2022) நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு நேபாளை வீழ்த்தி வெள்ளி பதக்கத்தை வென்றோம். தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டும் இந்தியா அணியில் இருந்தேன்.மாற்றுத்திறனாளிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் முன்னேறி வரவேண்டும். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும் என்றும் ஊக்கத்துடன் செயல்பட்டால் தடைகளை தகர்த்து சாதனைகள் புரியலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற போதிலும் அரசாங்கத்தால் முறையாக எந்தவித ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை மேலும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினால் இன்னும் ஒலிம்பிக்ஸ் அளவில் பதக்கம் வெல்வேன்” என்று கூறினார்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi