ஹோம் /தென்காசி /

"veg பாதி non-veg பாதி கலந்து செய்த பீட்சா தான்.." சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவர ரெஸ்டாரண்ட் புது முயற்சி..

"veg பாதி non-veg பாதி கலந்து செய்த பீட்சா தான்.." சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவர ரெஸ்டாரண்ட் புது முயற்சி..

X
புதுவகை

புதுவகை பீட்சா

Pizza Varieties : தென்காசியில் அதிகம் விற்பனையாகும் பாதி வெஜிடேரியன் பாதி நான் வெஜிடேரியன் பீட்சா. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

பீட்சா என்றாலே வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? அல்லது நான் வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? என்று தான் நம் மனதில் கேள்வி வரும். ஆனால் பீட்சாவில் ஒரு பாதியில் வெஜிடேரியன் ஆகவும், ஒரு பாதியில் நான் வெஜிடேரியன் ஆகவும் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் தென்காசி வந்து நிச்சயம் இதை ட்ரை செய்து பாருங்கள். சங்கரன்கோவில் RTO ஆபிஸ்க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த EAT SEA ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றபடி ஒரே பீட்சாவில் வெஜ், நான் வெஜ் இரண்டையும் கூட கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறார்கள்.

புது வகை பீட்சா

அதாவது ஒரு பாதி பீட்சாவின் டாபிங்கை வெஜ் ஆகவும், மறு பாதி டாபிங்கை நான் வெஜ் ஆகவும் தயாரிக்கின்றனர். ஒரு பாதியில் சிக்கன் வைத்தும், மறுபாதியில் வெஜிடேரியன் ஆகிய ஸ்வீட் கான், குடைமிளகாய் வைத்தும் மேலே எக்கச்சக்கமான சீஸ் தூவி அவனில் வைத்து எடுத்து சுடச்சுட கொடுக்கிறார்கள். இது வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.

First published:

Tags: Food, Lifestyle, Local News, Tenkasi