முகப்பு /தென்காசி /

குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து எப்படி இருக்கு தெரியுமா?

குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து எப்படி இருக்கு தெரியுமா?

X
குற்றால

குற்றால அருவி

Courtallam Falls | தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறித்த விவரங்கள்.

  • Last Updated :
  • Tenkasi, India

கோடை வெயிலின் தாக்கத்தால் குற்றால அருவிகள் வறண்டு போயுள்ளன. குறிப்பாக புலி அருவியில் தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்த இலைகள் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதேபோல் மழை பெய்தாலும் அருவிகளில் பெருக்கெடுக்கும் அளவுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே தண்ணீர் வரத்து குற்றால அருவிகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக புலி அருவியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வறண்டு போய் இருக்கும் புலி அருவி

குற்றாலத்தில் மற்ற அருவிகளை காட்டிலும் புலி அருவி குழந்தைகள் குளித்து விளையாடுவதற்கு ஏற்ற இடமாக இருக்கும். தற்போது புலி அருவியில் தண்ணீர் வராமல் அருவி வறண்டு காணப்பட்டது. தண்ணீர் வரும் பாதை முழுவதும் அனைத்து இடங்களும் வறண்டு போய் தண்ணீர் செல்லும் இடம் முழுக்க காய்ந்த இலைகளால் நிரம்பி இருந்ததை காண முடிந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புலி அருவிக்கு வந்து நீர் இல்லாமல் வறண்டு இருக்கும் புலி அருவி பார்த்துவிட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

    First published:

    Tags: Courtallam, Lifestyle, Local News, Tenkasi, Travel