முகப்பு /தென்காசி /

குற்றாலத்துக்கு ட்ரிப் போறீங்களா? - அப்ப இப்படித்தான் நீங்க குளிக்கனும்..!

குற்றாலத்துக்கு ட்ரிப் போறீங்களா? - அப்ப இப்படித்தான் நீங்க குளிக்கனும்..!

X
குற்றாலம்

குற்றாலம் அருவி

Courtallam Waterfalls | தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் புதுமையான முறையில் குளித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. கோடை காலத்தை குற்றாலத்தில் செலவிட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்ககூடிய குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் களை கட்டும்.

தற்போது தென்காசி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக 34 டிகிரியில் இருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குற்றால அருவிகளில் நீர்வரத்து மிகவும் குறைவான அளவில் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். குற்றால மெயின் அருவியில், பெண்கள் பகுதியில் பாறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது.

வறண்டு போயுள்ள குற்றால நீர்வீழ்ச்சி

இதையும் படிங்க : 10 ரூபாய்க்கு கிடைக்கும் ஃப்ரெஷ் ஜூஸ்..! ரங்கநாதன் தெருவை தேடிச்செல்லும் விழுப்புரம் மக்கள்..!

ஆண்கள் பகுதியில் பாறையை ஒட்டியபடி சிறிதளவு வரும் தண்ணீருக்காக கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தண்ணீர் நிரப்பி அதன் குளித்து வருகின்றனர். மேலும் கோடை விடுமுறையை குற்றாலத்தில் செலவிடலாம் என எண்ணி வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Courtallam, Local News, Tenkasi