ஹோம் /தென்காசி /

தென்காசி குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தென்காசி குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலம் ஐந்தருவி

குற்றாலம் ஐந்தருவி

Tenkasi District | தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருதால், குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

பகல் நேரத்திலும் வானம் மேகமூட்டம் காரணமாக இருண்டு காணப்படுகிறது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி காக்காச்சி பகுதியில் அதிகபட்சமாக 36 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதனால், அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டு வருகின்றனர்.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பாக, மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Published by:Suresh V
First published:

Tags: Courtallam, Local News, Tenkasi