ஹோம் /தென்காசி /

மனதை மயக்கும் குற்றாலம் சிற்றருவி.. ஒரு ஜாலி டூர் போலாம் வாங்க..

மனதை மயக்கும் குற்றாலம் சிற்றருவி.. ஒரு ஜாலி டூர் போலாம் வாங்க..

X
Chittratuvi 

Chittratuvi 

courtallam Sitraruvi Special | சிற்றருவியில் காலை 7:00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

குற்றாலத்தில் தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் சிற்றருவி குறித்து சிறப்புகளை பார்ப்போம்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மலைகளில் இருந்து வரும் மூலிகை தண்ணீரில் குளிப்பதற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவி ,செண்பகா தேவி அருவி, தேன் அருவி, சிற்றருவிகள் என பல்வேறு அருவிகள் இங்கு இருக்கிறது. இதில் பலரும் மெயின் அருவி பழைய அருவி ஐந்தருவியில் குளித்து இருப்பீர்கள் ஆனால் சிற்றறிவுக்கு சென்று இருக்கிறீர்களா.? இல்லை என்றால் நிச்சயம் ஒரு முறை செல்லுங்கள் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

மெயின் அருவிக்கு செல்வதற்கு முன்னரே இந்த சிற்றருவி அமைந்திருக்கிறது. சிற்றருவி பலருக்கும் தெரியப்படாத இடமாகவே இருக்கும். சிற்றறுவியின் நுழைவு வாயில் வழியாக சென்றால் இரண்டு புறங்களிலும் மரங்கள் நிறைந்த காட்டுக்குள் செல்லும் அனுபவத்தை போகும் வழியெல்லாம் அனுபவிக்கலாம் ஒரு கிலோமீட்டர் ஒரு மினி டிரக்கிங் செய்து மேலே ஏறி சென்றால் கொஞ்சம் படிகளும் ஏற வேண்டியதிருக்கும்.

போகும் வழியில் ஆங்காங்கே அருவிகள் சத்தம் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கும். காடுகளுக்கு நடுவே அருவிகள் சத்தம் கேட்பதற்கே ரம்யமான ஒரு உணர்வை தரும். மேலும் சிற்றருவில் குளிப்பதற்கு ஒரு நபருக்கு ஆறு ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். ஆறு ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்ற பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். உள்ளே பெண்கள், ஆண்களுக்கு குளிப்பதற்கு இரண்டு அறைகள் இருக்கும் குளியலறை என்று நினைத்து விடக்கூடாது அந்த அறைக்குள் சென்று பார்த்தால் தான் மலையின் நடுவில் இருந்து வரும் சிற்றருவியை காண முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அருவிகளை சுற்றி சுவர்கள் எழுப்பி இருப்பது ஒரு பிரைவசியான ஃபீலை கொடுக்கும். மேலும் உடை மாற்றுவதற்கு என தனியாக ஒரு அறையும் உண்டு.மற்ற அருவிகளை விட இது உயரத்தில் சிறியது என்பதால் குழந்தைகள் இதனை பெரிதும் விரும்புவர். சீசன் நேரங்களில் மற்ற அருவிகளை போல இந்த அருவியும் திறக்கப்பட்டு தான் இருக்கும் ஆனால் நம்மில் பலருக்கு இப்படி ஒரு அறிவு இருப்பதே தெரியாமல் பலரும் அருவி மெயின் அருவி என்று கூட்டத்தில் குளிக்க சென்று கொண்டிருப்போம்.

காலையில் 7:00 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சிற்றருவி 2019 ஆண்டிற்கு பின்பு தான் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். நீங்கள் வித்தியாசமான அறிவியல் குளிக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இந்த சிற்றருவிக்கு ஒரு மினி டிரக்கிங் போய் அடித்து பாருங்கள்.

First published:

Tags: Local News, Tenkasi