முகப்பு /தென்காசி /

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா.. முகக்கவசம் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா.. முகக்கவசம் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi mask compulsory | தென்காசியில் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், நோயாளிகளுடன் உடனிருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்த அறிவுரைகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மார்ச் 2023 முதல் வாரத்தில் இரண்டு இலக்கு நோயாளிகளின் எண்ணிக்கை மார்ச் கடைசியில் மூன்று இலக்க நோயாளிகளாக எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை செயலகம் மற்றும் அமைச்சரவை அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், தனியார் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க | கரிவலம்வந்தநல்லூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

மேலும், மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகள். நோயாளிகளுடன் உடனிருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், முகக்கவசம் அணியாத நபர்கள் மீது தமிழ்நாடு பொதுசுகாதாரம் சட்டம் 1934-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Corona, Local News, Mask, Tenkasi