ஹோம் /தென்காசி /

வீட்டில் இருந்தே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி.. தெளிவாக விளக்கிய தென்காசி விவசாயி!

வீட்டில் இருந்தே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி.. தெளிவாக விளக்கிய தென்காசி விவசாயி!

X
தேங்காய்

தேங்காய் எண்ணெய்

Tenkasi | தென்னை வளர்க்க ஆசைப்படுவார்கள் விவசாயியின் கருத்தை கேட்டு பயன்பெறலாம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் கிராமத்தில் எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.கீழப்பாவூர் சார்ந்த இயற்கை விவசாயி மாரியப்பன் தென்னை மரங்களை பல வருடங்களாக வளர்த்து வருகிறார். தென்னை மரவளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் எடுக்கும் முறை பற்றி மாரியப்பன் விரிவாக விளக்கியுள்ளார்.

“40 ஆண்டுகள் பழமையான நாட்டு தென்னை மரத்திலிருந்து விழும் காய்ந்த காய்களை ஒரு நாள் அப்படியே தண்ணீரில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் அதை பதப்படுத்தப்பட்ட மண்ணில் ஊன்ற வேண்டும். மூன்று மாதத்தில் நட்ட காய்கள் முளைக்க துவங்கும். ஐந்து மட்டைகள் முளைத்த செடியை பிடுங்கி வேறொரு இடத்தில் நட வேண்டும். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் ஆன இடைவெளி விட்டு செடிகளை ஊன்ற வேண்டும். தென்னங்கன்றுகளை நட்டு எட்டு வருடத்தில் காய்கள் விட ஆரம்பிக்கும்.

தென்னை மரத்திலிருந்து விழும் முற்றின தேங்காய்களை எடுத்தால் சில தேங்காயை தண்ணீர் இருக்கும் சிலவற்றில் தண்ணீர் இருக்காது. தண்ணீர் ஆடும் காய்களை அப்படியே இருபது முதல் முப்பது நாட்கள் வரை போட்டு விட வேண்டும். தண்ணீர் முழுவதும் பற்றி தேங்காய் பருப்பாக மாறிவிடும். இப்பொழுது தேங்காயை சரி பாகமாக உடைத்து ஒரு மாதம் வரை வெயிலில் காய வைத்து விட வேண்டும். காய்ந்த தேங்காயில் இருக்கும் பருப்பை பிரித்து எடுக்க எளிதாக இருக்கும்.

அப்படி எடுக்கப்பட்ட பருப்பை மீண்டும் வெயிலில் இரண்டு நாட்கள் காய வைக்க வேண்டும். காய வைத்த பின்னர் அதை உடைத்தால் சத்தம் எழ வேண்டும். அப்படி இருக்கும் பருப்பை மட்டுமே தேங்காய் எண்ணெய் எடுக்க தயாராக இருக்கும் பருப்புகள் ஆகும். தேங்காய் பருப்புகளை எண்ணெய் ஆட்டும் செக்கு மில்லுக்கு எடுத்து சென்று கொடுத்தால் அவர்கள் பருப்பை இயந்திரத்தில் போட்டு கரும்பு சாறு பிழிவது போல தேங்காய் பருப்பை பிழிந்து தேங்காய் எண்ணெய் எடுத்து தருவார்கள். ஆட்டும் போது அதில் ஏலக்காய், எழிமிச்சம் பழம், கருப்பட்டி போன்றவை சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கும்” என்று கூறி மீண்டும் தன் விவசாய வேலைகளில் ஈடுபட தொடங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coconut oil, Local News, Tenkasi