ஹோம் /தென்காசி /

தென்காசி சங்கரநாராயணார் கோயிலில் மருத்துவ மையத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

தென்காசி சங்கரநாராயணார் கோயிலில் மருத்துவ மையத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

காணொளி காட்சியில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ மையம்

காணொளி காட்சியில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ மையம்

Tenkasi news : தென்காசி சங்கரநாராயணார் கோயிலில் மருத்துவ மையத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி சங்கரநாராயணார் கோயிலில் மருத்துவ மையத்தை காணொலிக்காட்சிவாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோயில். இந்த கோயிலில் மருத்துவ மையம் அமைக்கபட வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், இங்கு மருத்துவ மையம் அமைக்கப்பட்டது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  ப. ஆகாஷ் இ.ஆ.ப சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி சங்கரன்கோவில் ஒன்றிய குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: சுப கோமதி (தென்காசி)

First published:

Tags: Local News, Tamil News, Tenkasi