முகப்பு /தென்காசி /

தென்காசியில் கோலாகலமாக தொடங்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி!

தென்காசியில் கோலாகலமாக தொடங்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி!

X
முதலமைச்சர்

முதலமைச்சர் கோப்பை போட்டி

Tenkasi news | வரும் 20ஆம் தேதி வரை நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கன விளையாட்டுப் போட்டிகள் தென்காசி மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தென்காசி மாவட்டத்தில் தொடங்கியது.

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

14 பிரிவுகளில் வரும் 20 ஆம் தேதி வரை இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளில் பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள் மற்றும் அரசு ஊழியர்களுகான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் மற்றும் தென்காசி நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: CM MK Stalin, Local News, Tenkasi