தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் என்ற ஜெபவீடு அமைந்துள்ளது. இதில் மத போதகராக நாகர்கோவிலைச் சேர்ந்த 49 வயதான ஸ்டான்லி குமார் என்பவர் பணியற்றி வருகிறார். இவர் பாவமன்னிப்பு கேட்க வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் பெண் ஒருவர் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பகீர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் பாதிரியால் ஸ்டான்லி குமார் மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தனது மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகாத நிலையில், பிலிவர்ஸ் சர்ச்சிற்கு அழைத்து சென்று மதபோதகரான ஸ்டான்லி குமாரிடம் ஜெபிக்கும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் அந்தப் பெண்ணை சர்ச்சில் 3 நாட்கள் தங்கும் படி கூறியுள்ளார். அவர் மீதான நம்பிக்கையில் பெண் தனது மகளை தங்க வைத்துள்ளார்.
இதையும் படிக்க : தாய், மகள், மருமகள் என ஒரே வீட்டில் 3 பெண்களிடம் ஆபாச சாட்டிங்... பாதிரியார் குறித்து வெளியான பகீர் தகவல்கள்!
ஆனால் ஸ்டான்லி குமார் பெண்ணின் மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதுடன் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், செல்போனில் ஆபாசமாக பேசியும் அத்துமீறியுள்ளார். இந்த விவகாரம் பிரச்னையானவுடன் மன்னிப்பு கேட்பது போல நடித்துள்ளார் மதபோதகர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதேபோல், அருணாப்பேரியை சேர்ந்த ஒரு பெண் குளிப்பதை படம் எடுத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சர்ச்சில் அதி நவீன சுழல் கேமரா பொருத்தி சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து, அதன் மூலம் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்து மிரட்டி வருவதாகவும் அந்த புகார் மனுவில் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க : மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன்..! திருவள்ளூரில் பயங்கரம்
இந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பாவூர்சத்திரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் மதபோதகர் ஸ்டான்லி குமார் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்தது உண்மை என தெரியவந்தது. இதைதொடர்ந்து மதபோதகர் ஸ்டான்லி குமாரை போலீசார் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதியார் ஒருவர் பாலியல் வழக்கு தொடர்பாக கைதான நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் பாலியல் தொந்தரவு செய்த மதபோதகர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : செந்தில் சண்முகசெல்வம் (தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Sexual harassment, Tenkasi