தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், வாவ் வொண்டர் ஆஃப் வுமன் சார்பாக நடத்தப்பட்ட கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் சுய தொழில் செய்யும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த வாவ் அமைப்பின் சார்பாக பெண்களுக்காக பெண்களே முன்னெடுக்கப்பட்ட அமைப்பானது சுய தொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக கிறிஸ்மஸ் மார்க்கெட் ஆனது கடையநல்லூரில் இருக்கும் இட்டாலியன் ரெஸ்டாரண்டில் வைத்து நடைபெறுகிறது.
இதில் பல பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கேக் தயாரிக்கும் பெண்கள், இயற்கையான முறையில் சோப் தயாரிக்கும் பெண்கள், ஆரி ஒர்க் செய்பவர்கள், இயற்கை மூலிகைகளைக் கொண்டு சூப் பவுடர் தயாரிக்கும் பெண்கள், குழந்தைகளை கவரும் வண்ணம் அபாகஸ் மற்றும் புத்தகங்கள், அழகிய பேனா நோட்டுகள் ஆகிய பொருட்களை சமூக வலைத்தளம் மூலம் விற்று வரும் பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் பேசியபோது, “பெண்களால் எல்லாம் செய்ய முடியும் என்ற நோக்கில் பெண்கள் ஒருங்கிணைந்து கடைகளை நடத்துவதின் மூலம் எங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பெண்களுக்காக பெண்களே நடத்தப்படும் இந்த கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் கடையநல்லூரை சுற்றியுள்ளவர்கள் தவறாமல் ஒரு விசிட் செய்து பாருங்கள். இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட் கிறிஸ்மஸ் வார விடுமுறைக்கு அதாவது டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் மட்டுமே நடைபெறுகிறது” என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi