முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தேர் திருவிழா.. மே 5ம் தேதி கோலாகலமாக நடக்கிறது..

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தேர் திருவிழா.. மே 5ம் தேதி கோலாகலமாக நடக்கிறது..

X
மாதிரி

மாதிரி படம்

Sankarankovil Sankaranarayana Swamy Temple : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் இருந்து வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். முன்னதாக, கோயில் யானை கோமதி பெருங்கோட்டருக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

சங்கரநாராயணர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

மேலும் விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பின்னர், காலை 5.47 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே 5ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Tenkasi