முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்!

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்!

X
Temple

Temple car festival 

Sankaranarayana Swamy Temple : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை பிரம்ம உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்ம உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இங்கே, சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும், சுவாமி மற்றும் அம்பாளின் வீதி உலாவும் நடைபெறும். சித்திரை திருவிழா 9ம் திருநாளில் சுவாமி அம்பாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி பெரிய தேரிலும் கோமதி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 10.30 மணி அளவில் சுவாமி தேரோட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது தேரான கோமதி அம்பாள் தேரோட்டம் நிகழ்ச்சி 12 மணியளவில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

இந்த தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னேற்பாடாக ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம், போலீஸ் பாதுகாப்பு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்.பி. சாம்சன் ஆலோசனையின் படி டிஎஸ்பி சுதீர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி பணியில் ஈடுபட்டனர்.

top videos

    நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வெயிலில் பாதிக்காத வண்ணம் சாலை முழுவதும் தொடர்ந்து நீர் தெளிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வெயில் நேரத்திலும் வெப்பம் இல்லாமல் சென்றுவர உதவியாக இருந்தது.

    First published:

    Tags: Local News, Tenkasi