முகப்பு /தென்காசி /

நெல்லை மக்களே உஷார்.. சென்னை டூ செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்!

நெல்லை மக்களே உஷார்.. சென்னை டூ செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Silambu Express Time Change | சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வழியாக பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  • Last Updated :
  • Tenkasi, India

சென்னையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிஸ் ரயிலின்நேரம் ஏப்ரல் 19ம் தேதிமுதல் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வழியாக பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் மும்முறை இயக்கப்பட்டு வருகிறது. வாரம் தோறும் புதன். வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வந்து சேருகிறது.

கூடுதல் ரயில்கள் இயக்கம் காரணமாக சிலம்பு எக்ஸ்பிரசின் (எண்.20681) நேரம் குறிப்பிட்ட இடங்களில் 19ம் தேதி (புதன்)முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் வழக்கம்போல் இரவு 8.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு முன்பு அதிகாலை 1.40 மணிக்கு வந்து2 மணிக்கு அங்கிருந்து புறப்படும். இனி 19ம் தேதிமுதல் அதிகாலை 1.45 மணிக்கு வந்து, 1.50 மணிக்கு புறப்படுகிறது.

சிவகங்கை

இதே போல புதுக்கோட்டைக்கு 2.45 மணிக்கு வருவதற்கு பதிலாக 2.33 மணிக்கு வந்து 2.35 மணிக்கு புறப்படுகிறது. காரைக்குடிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்போது 3.18 மணிக்கு வந்து சேர்கிறது. இனி ஏப்ரல் 19ம் தேதி முதல் 3.08 மணிக்கு வந்து, 3.10 மணிக்கு புறப்படும். சிவகங்கைக்கு 3.52 மணிக்கு பதிலாக இனி3.42 மணிக்கு வந்து சேர்வதோடு, 3.44 மணிக்கு புறப்படும்.

மானாமதுரைக்கு காலை 4.20 மணிக்கு பதிலாக. 4.10 மணிக்கே வந்து சேரும். அருப்புக்கோட்டைக்கு 5.04 மணிக்கு பதிலாக. 4.54 மணிக்கு வருவதோடு. 4.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். விருதுநகருக்கு 5.33 மணிக்கு வந்து சேருவதில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்பின்னர் வழக்கம்போல் முன்பு போல் ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் கடந்து செங்கோட்டை சென்றடையும்.

ரயில் நேரம் மாற்றப்பட்ட இடங்களில் 10 நிமிடம் முன்னதாகவே செல்வதால், ரயில் பயணிகள் அதற்கேற்ப பயண நேரங்களை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Railway, Southern railway, Tenkasi