முகப்பு /தென்காசி /

கோவில் கட்டிய மன்னருக்கு விழா எடுக்கும் சங்கரன்கோவில் மக்கள்!

கோவில் கட்டிய மன்னருக்கு விழா எடுக்கும் சங்கரன்கோவில் மக்கள்!

X
கோவில்

கோவில் கட்டிய மன்னருக்கு விழா எடுக்கும் சங்கரன்கோவில் மக்கள்

Tenkasi News | தென்காசி சங்கரநாராயணர் கோயிலை கட்டிய உக்கிரபாண்டிய மன்னருக்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் 10வது நாளில் அவரது சாதனைகளை போற்றும் விதமாக விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் சங்கரன்கோவில் வாசிகள்.

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் சுமார் 1000 பழமையான கோவிலாகும். இந்த கோவிலை உக்கிரபாண்டிய மன்னன் கட்டியதாக வரலாறு குறிப்புகள் கூறப்படுகிறது.சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.

ஆனால் அந்த திருவிழாக்கள் வருவதற்கு முன்பே சித்திரை பிரம்மோற்சவம் 48 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். காலப்போக்கில் சித்திரை திருவிழாவை விட ஆடித்தபசு விழா தான் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா என்ற ஒன்றை மக்கள் மறந்தே விட்டனர்.

கோவில் கட்டிய மன்னருக்கு விழா எடுக்கும் சங்கரன்கோவில் மக்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனால் சிறப்பான இந்த சித்திர திருவிழாவில் தான் இந்த சங்கரநாராயணர் கோயிலை கட்டிய உக்கிர பாண்டிய மன்னனின் வீதி உலா நடைபெறும். சித்திரை பிரமோற்சவத்தின் பத்தாவது திருநாளில் மன்னர் உக்கர பாண்டியனின் வீதி உலா நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை பிரம்ம உற்சவத்தின் 10வது நாள் திருவிழா அன்று உக்கிர பாண்டிய மன்னருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

First published:

Tags: Local News, Tenkasi