முகப்பு /தென்காசி /

கரிவலம்வந்தநல்லூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

கரிவலம்வந்தநல்லூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

X
மாதிரி

மாதிரி படம்

Karivalamvanthanallur Coconut Farm Fire : தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ராயகிரி சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அங்கே பதற்றம் நிலவியது.

இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் அணைத்தனர். இதனால் தொழிற்சாலையில் இயந்திரங்கள் உள்ள பகுதிகள் மற்றும் தென்னை நார் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் தீ பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மின் வரிரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi