ஹோம் /தென்காசி /

குற்றாலம் சென்றால் அருவிகளில் குளிக்க முடியுமா... நிலவரம் என்ன?

குற்றாலம் சென்றால் அருவிகளில் குளிக்க முடியுமா... நிலவரம் என்ன?

குற்றாலம் மெயின் அருவி

குற்றாலம் மெயின் அருவி

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், அங்குள்ள குற்றாலம் அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், வெள்ளம் குறைந்த பின்னர் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக ‌குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மறுநாள் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சில்லென ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். இதேபோல, ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

Must Read :அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

பின்னர், நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், இன்றும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குற்றாம் சீசன் முடிவடைந்துள்ள நிலையில், அந்த பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், அருவியில் தண்ணீர் வரத்து குளிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது. எனவே, அங்கே சுற்றலா செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் சென்று அருவிகளில் குளித்து மகிழலாம்.

Published by:Suresh V
First published:

Tags: Courtallam, Local News, Tenkasi