ஹோம் /தென்காசி /

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்.. தென்காசியில் எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்.. தென்காசியில் எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

Camps For Physically Disabled | தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வட்டாரத்தில் நடைபெற உள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி முதல் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வட்டாரத்தில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை பெற வேண்டும் என்றால் உடல் பரிசோதனை செய்த அரசு மருத்துவரின் சான்றிதழ் தேவை. எனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிறப்பு முகாம்கள் கீழ்காணும் விவரப்படி ஒவ்வொரு வட்டத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் புகைப்படம் 5 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் முகாமில் பெறலாம் எனவும் ஆட்சியர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான சிறப்பு முகாம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் அவர்கள் மருத்துவம் மற்றும் பிற உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஜனவரி 23ம் தேதி தென்காசி மாவட்டத்தில் இருக்கும் இ..சி.ஐ. அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெறவுள்ளது. ஜனவரி 25ம் தேதி ஆலங்குளம் அரசு பள்ளியிளும், ஜனவரி 27ம் தேதி கீழப்பாவையில் உள்ள டி.பீ.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜனவரி 30ம் தேதி செங்கோட்டை சி.எம்.எஸ்.எஸ் அரசாங்கம் மேல்நிலை பள்ளியிலும், பிப்ரவரி 3ம் தேதி கடையத்தில் உள்ள சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியிலும், பிப்ரவரி 6ம் தேதி கடையநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியிலும், பிப்ரவரி 8ம் தேதி வாசுதேவநல்லூர் வட்டார அளவிலான மருத்துவ முகாம் புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் பிப்ரவரி 10ம் தேதி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிப்ரவரி 13ம் தேதி குருவிகுளம் அரசு மேல்நிலை பள்ளியிலும், பிப்ரவரி 15ம் தேதி சேந்தமரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகள் அருகில் இருக்கும் பள்ளியில் நடைபெற இருக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்  அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Local News, Tenkasi