முகப்பு /தென்காசி /

காதலர் தினத்தில் பர்ஸ் காலியாகாமல் இருக்க பட்ஜெட் பிரண்ட்லி பரிசுகள்.. கடையநல்லூரில் இந்த இடத்துக்கு போங்க..

காதலர் தினத்தில் பர்ஸ் காலியாகாமல் இருக்க பட்ஜெட் பிரண்ட்லி பரிசுகள்.. கடையநல்லூரில் இந்த இடத்துக்கு போங்க..

X
காதலர்

காதலர் தினம்

Valentines Day Gifts : காதலர்கள் பர்ஸ் காலியாகும் நிலை வராமல் இருக்க உங்களுக்கு பட்ஜெட் பிரண்ட்லி பரிசுகள் அறிமுகப்படுத்துகிறது கடையநல்லூரில் இருக்கும் இத்தாலியன் ரெஸ்டாரண்ட்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

பிப்ரவரி மாதம் என்றாலே உலகம் முழுவதும் காதலை கொண்டாடும் மாதம் ஆகிவிடுகிறது. அதற்கு ஏற்றார்போல் தான் இந்த மாதத்தில் ஒரு வாரம் முழுவதுமே காதலர் தின கொண்டாட்டங்கள் கலைகட்டுகிறது. பிப்ரவரி 7ம் தேதி ரோஜாக்கள் தினத்தில் தொடங்குகிறது இந்த ஒரு வார கொண்டாட்டம். இந்த ரோஜா தினத்தில் தங்களின் அன்பை ரோஜா பூக்கள் கொடுத்து வெளிப்படுத்துவது வழக்கம். அடுத்ததாக வருகிறது பிப்ரவரி 8 அன்று பிரபோசல் டே.

இந்த நாள் அன்று காதலி காதலனிடம் அல்லது காதலன் காதலியிடமோ தங்களது காதலை தெரிவிக்க வேண்டும். அதற்கு கொண்டாடப்படுவது தான் இந்த பிரபோசல் டே. அடுத்ததாக வருகிறது பிப்ரவரி 9 இந்த நாளில் காதலில் முக்கிய இடம் பிடிக்கும் சாக்லெட்டுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது வழக்கம். நெக்ஸ்ட் வருகிறது பிப்ரவரி 10 இந்த நாளில் காதலிக்கு மிகவும் பிடித்த டெட்டி பியரை காதலன் பரிசளிக்க வேண்டும். இதுவும் காதலர்கள் மத்தியில் ஒரு சம்பிரதாயம்.

அடுத்ததாக பிப்ரவரி 11. இந்த நாளில் காதலன் காதலி இருவருமே தங்களின் அன்பு தூய்மையாக இருக்கும் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். அடுத்து வருகிறது பிப்ரவரி 12 இந்த நாளில் முத்தங்கள் மூலம் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் கிஸ் டே. காதலர் வார கொண்டாட்டத்தில் பிப்ரவரி 13 ஹக் டே வாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அன்பை அணைத்தலில் வெளிப்படுத்தும் வழக்கம். அடுத்து ஹை லைட் பிப்ரவரி 14 காதலர் தினம் காதல் பறவைகள் வானில் சிறகடிக்கும் நாள்.

இத்தோடு இந்த காதலர் வார கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது.

இப்படி இத்தனை நாட்கள் உள்ளதால் காதலர்கள் பர்ஸ் காலியாகும் நிலை வராமல் இருக்க உங்களுக்கு பட்ஜெட் பிரண்ட்லி பரிசுகள் அறிமுகப்படுத்துகிறது தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் இருக்கும் இத்தாலியன் ரெஸ்டாரண்ட். இங்கு காதலர் தினத்தை முன்னிட்டு சாக்லேட் கிப்ட் ஹேம்பர்கள் 300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தயார் செய்வதற்காக தெர்மாகோல் அட்டைப் பெட்டிகளை வைத்து அதில் கிட் கேட், டைரி மில்க், munch போன்ற சாக்லேட்களை அடுக்கி கிப்ட் ஹேம்பர் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இது பட்ஜெட் பிரண்ட்லியாகவும் காதலிக்கு பிடிக்கும் வகையில் இருப்பதால் காதலர்கள் இடையே மிகவும் பிரபலமாகி விட்டது.

First published:

Tags: Local News, Tenkasi