முகப்பு /தென்காசி /

செம்ம டேஸ்ட்டா பிரியாணி சாப்பிடனுமா? சங்கரன்கோவில் மக்களோட ஒரே சாய்ஸ் இந்த கடை தான்..

செம்ம டேஸ்ட்டா பிரியாணி சாப்பிடனுமா? சங்கரன்கோவில் மக்களோட ஒரே சாய்ஸ் இந்த கடை தான்..

X
செம்ம

செம்ம டேஸ்ட்டா பிரியாணி சாப்பிடனுமா?

Tasty Biriyani in sankarankovil | சங்கரன்கோவில் மக்களை தன் சுவையான பிரியாணிக்கு அடிமையாக்கி இருக்கிறது இங்குள்ள பிரியாணி கடை.

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சுல்தான் பிரியாணி கடை சுமார் 100 வருஷத்துக்கு மேல் இயங்கி வருகிறது. இங்கு மட்டன் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும். ஹாஃப் மட்டன் பிரியாணியில் அவ்வளவு மட்டன் துண்டுகள் போட்டு தருகின்றனர். இது தினமும் காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையில் கிடைக்கும்.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் சீக்கிரம் முடிந்துவிடும். அதனால் இங்கு பிரியாணி சாப்பிட விரும்புபவர்கள் சீக்கிரம் சென்றால் தான் பிரியாணி கிடைக்கும். இங்கு மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, மூளை எல்லாமே கிடைக்கும். அதை சாப்பிடுவதற்காகவே நிறைய உணவு பிரியர்கள் சுல்தான் கடையை தேடி வருகின்றனர்.

பிரியாணியின் அளவு கம்மியா இருந்தாலும் அதிக பீஸ் போட்டு தருகின்றனர். முழுக்க முழுக்க சீரக சம்பா அரிசியில் தான் சுல்தான் பிரியாணி கடையில் பிரியாணி செய்கின்றனர். ப்ளைன் மட்டன் பிரியாணி 150 ரூபாய்க்கும் ஒரு பிளேட் மட்டன் பிரியாணி 340க்கும் விற்கின்றனர். காலையில் எப்படி பிரியாணிக்கு இங்கு கூட்டம் அலைமோதுமோ அதே மாதிரி தான் சுல்தான் பிரியாணி கடையில் மாலை வேலையில் கிடைக்கும் சூப்புக்கும் கூட்டம் அலைமோதும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சில கடையில் சூப்பில் கார்ன் பிளேக்ஸ் போட்டு தருவார்கள். ஆனால் இந்த கடையில் சூப்புடன் பன் கொடுக்கின்றனர். சூப்பில் அவற்றை முக்கி சாப்பிடுவதற்காகவே இந்த கடைக்கு நிறைய பேர் வருகின்றனர். இந்த கடையில் மொத்தமே ஒரு 10 முதல் 15 பேர் தான் அமர்ந்து சாப்பிடுற மாதிரி இருக்கும். அதற்கு மேல் கூட்டம் வந்தால் காத்திருந்து தான் சாப்பிட முடியும்.

சங்கரன்கோவிலில் உள்ளவர்கள் பாதி பேர் இந்த கடையை கண்டிப்பா சாப்பிட்டு இருப்பாங்க. நீங்களும் சங்கரன்கோவில் வழியாக சென்றால் சுல்தான் கடை மட்டன் பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க.

First published:

Tags: Food, Lifestyle, Local News, Tenkasi