முகப்பு /தென்காசி /

பாவூர்சத்திரத்தில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

பாவூர்சத்திரத்தில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை

புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை

Tenkasi News : தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பாவூர்சத்திரத்தில் ரூ.1.78 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாவட்ட நகர்புற ஊரமைப்பு அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரத்தில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாவட்ட நகர்புற ஊரமைப்பு அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி கலந்துகொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் பேசியதாவது, “தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பாவூர்சத்திரத்தில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாவட்ட நகர்புற ஊரமைப்பு அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சுமார் 8 மாதத்தில் கட்டிடத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். எனவே பொது மக்கள் அனைவரும் வரும் காலங்களில் டி.டி.சி.பி ஒப்புதல் பெறுவதற்கு பாவூர்சத்திரத்தில் அமைய உள்ள அலுவலகத்திற்கு வந்து பயன்பெற வேண்டும்” என தெரிவித்தார்.

புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, ஒன்றிய குழு துணை தலைவர் முத்துகுமார், தென்காசி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா, உதவி இயக்குநர் (நகர்புற ஊரமைப்பு அலுவலகம்) அனுஜா, உதவி செயற்பொறியாளர்கள்(கட்டிடம்) அனிதா, உதய குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi