முகப்பு /தென்காசி /

சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி விருது வென்ற தென்காசி ஆட்சியர் ஆகாஷ்..

சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி விருது வென்ற தென்காசி ஆட்சியர் ஆகாஷ்..

Collector award

Collector award

Tenkasi News : தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி விருது வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

13வது தேசிய வாக்காளர் தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில அளவிலான சிறந்த தேர்தல் அதிகாரி விருது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இதில் Sveep செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி விருதுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேர்வு பெற்றுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்த விருதினை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாசுக்கு வழங்கினார். மேலும் அவருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tamil News, Tenkasi