ஹோம் /தென்காசி /

குற்றாலத்துக்கு கிளம்பியாச்சா.. எந்த அருவிகளில் எல்லாம் தடை? தெரிஞ்சுட்டு போங்க!

குற்றாலத்துக்கு கிளம்பியாச்சா.. எந்த அருவிகளில் எல்லாம் தடை? தெரிஞ்சுட்டு போங்க!

குற்றாலம்

குற்றாலம்

குற்றாலத்தின் மெயின் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. இதையடுத்து, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கு குறையாததால், தடை நீடிக்கப்பட்டது.

இதன் பிறகு, அருவிகளில் வெள்ள பெருக்கு குறைந்தால், மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தடை விலகிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பிறகு, இங்கியிருந்து, வாகனங்களில் சென்று, ஐந்தருவி, புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi