முகப்பு /தென்காசி /

தென்காசியில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

தென்காசியில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

தென்காசியில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

தென்காசியில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

Tenkasi News : தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆட்சித்தலைவர் இரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது. “தென்காசி மாவட்டத்தில், மாவட்ட நூலகம் இசிஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்படும். இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் படித்து பயன்பெறலாம். கல்வியை பொறுத்த வரையில் நமது மாவட்டம் முதன்மையில் உள்ளது. தென்காசி மற்றும் சங்கரன்கோவில் நகர் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். கிராம புறங்களிலும் இந்த ஆண்டு அதிக தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடிந்த பள்ளி மாணவ, மாணவியர்களை மேல் படிப்பிற்கு தயார் செய்வதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் பயன் உள்ள புத்தகங்களை படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.

தென்காசியில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி வசி வட்டார நூலகத்தில் போட்டித்தேர்வுகள் மற்றும் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு NMMS தேர்விற்கு இலவசபயிற்சி, இலவச புத்தகங்கள், இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டி தேர்வினை எளிதில் வெற்றி கொள்ளும் விதமாக தென்காசி வஉசி வட்டார நூலகம் வழிகாட்டியாக உள்ளது. நூலகத்தில் தென்காசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 320க்கும் மேற்பட்டோர் போட்டித்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்து தினமும் நூலகத்திற்கு வருகைதந்து பயின்று வருகின்றனர்.

இவர்களில் 20 பட்டதாரிகள் நூலகத்தில் கற்றோம். நூலகத்தால் வென்றோம் என்கிற பெருமையுடன் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரயில்வே தேர்வு, எஸ்எஸ்சி, பார்கவுன்சில் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்து உள்ளனர். மேலும் நூலகத்தில் NMMS பயிற்சி 800 மாணவ செல்வங்களுக்கு பயிற்சி அனித்ததின் பயனாக 109 மாணவ செல்வங்கள் மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். நூலகம் மூலம் பயிற்சிகளும் மாதிரி தேர்வுகளும் வழங்கினாலும், தங்களது சொந்த முயற்சி பயின்ற கல்வி, எடுத்த பயிற்சிகள் மூலம் வெற்றி பெற்று உள்ளனர்” என்றார்.

மேற்கண்ட 129 சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி நற்சான்றிதழ் மற்றும் கேடையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார், 110 போட்டித்தேர்விற்கான நூல்களை திருதிருமாறன் அவர்கள் நன்கொடையாக வழங்கினார்.

இதையும் படிங்க : 'வந்தாச்சு புயல்' ராமநாதபுரம் மக்களே உஷார்.. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வட்டார நூலகர் பிரமநாயகம், கண்காணிப்பாளர். சங்கரன், ஆய்வாளர் திருகணேசன், பொருளாளர். ரோட்டரி யோகா சேகர். மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல்அஜீஸ், டிரஸ்ட் குழந்தைகள் இல்லம் நிறுவனர் திருமாறன், எழுத்தாளர். சுப்பிரமணிய ராஜா, வாசகர் வட்டத் துணைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் மயிலேறும் பெருமாள் (ஓய்வு) இயக்குநர் மைய அரசு முகைதீன், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராராமசுப்பிரமணியன் பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் திருமுத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi