ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் உளுந்து சாகுபடிக்கு அசத்தலான மானியம் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உளுந்து சாகுபடிக்கு அசத்தலான மானியம் அறிவிப்பு

உளுந்து பயிர்

உளுந்து பயிர்

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் உளுந்து சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் பயன்பெற்று பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் உளுந்து சாகுபடிக்கு அசத்தலாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் பயன்பெற்று பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண்மை துறை சார்பில், விவசாயிகளிடையே உளுந்தை சாகுபடியை ஊக்குவிக்கப்படுகிறது.

இதில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகிறது. செங்கோட்டை வட்டாரத்தில் நெல் சாகுபடி மற்றும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை விவசாயிகளிடம் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தற்போது வரப்பில் உளுந்து என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நெல் பரப்பில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சி அழிக்கப்படுகிறது. மண்வளம் பெருகுகிறது. கூடுதலாக ஒரு பயறு வருவாய் கிடைக்கின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செங்கோட்டை வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் கேட்டுக்கொண்டார்.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வரப்பு பகுதிகளிலும் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Agriculture, Farmers, Local News, Tenkasi