ஹோம் /தென்காசி /

தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அண்ணாமலைபுதூரின் வரலாறு தெரியுமா?

தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அண்ணாமலைபுதூரின் வரலாறு தெரியுமா?

தென்திருவண்ணாமலை

தென்திருவண்ணாமலை

Tenkasi | அண்ணாமலை புதூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்க கூடிய புகழ் பெற்ற உண்ணாமலையம்பாள் கோவில் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின்போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் தாலுகா ஆயால்பட்டி கிராமத்தில் கிறிஸ்துவ குடும்பத்தில் 7 வது குழந்தையாக பிறந்தவர் பெரியசாமி சித்தர். அவரது சகோதரர்கள் 6 பேரும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற இவர் மட்டும் இந்து மதத்தின் ஈர்ப்பால் இந்து மதத்தை தழுவினார். அதனால் பிரிட்டிஷ்காரர்களும், அந்த ஊர்மக்களும் அங்கே வசிக்க விடாமல் தூரத்தினர்கள். பெரியசாமி சித்தர் சிவன் மீது கொண்ட அதிக பற்றினால் திருவண்ணாமலை சென்றடைந்தார்.

    அங்கு அவர் சிவனை வழிபட்டு வரும் போது சிவன், பெரியசாமி சித்தர் கனவில் தோன்றி என் புகழை தென் தமிழகத்திற்குகொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதால் சிவனாக இருக்க கூடிய திருவண்ணாமலையில் மண் எடுத்து கொண்டு தென் தமிழகத்திற்கு வந்தடைந்தார்.

    சிவனின் புகழை எடுத்துரைக்க திருநெல்வேலி வந்தடைந்தார். அங்கு பிரிட்டிஷ்காரர்களின் கொடுமையால் அங்கே இருக்க முடியாமல் சொந்த கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனவடலி சத்திரம் என்ற கிராமத்திற்கு வந்தடைந்தார்.

    பெரியசாமி சித்தர் பீடம் 

    அங்கேயும் மக்கள் துரத்தினார்கள். அங்கு இருந்து அவர் வரும் போது மலை அடிவாரத்தில் ஒரு கிராமம் தென்பட்டது.அங்கு சென்று அந்த மலையை பார்க்கும் போது திருவண்ணாமலை போல் தோன்றியதால் அந்த கிராமத்தில் சிவனுக்கு ஒரு கோவில் எழுப்பி அந்த ஊர் மக்களுடன் ஒன்றாக வழிபாட்டு வந்தார்.

    தென்திருவண்ணாமலை கோவில்

    வருடத்தில் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நாளன்று 3,200 அடி உயரம் உள்ள மலையின் உச்சியில் மிக பிரமாண்டமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அங்கே 7 கன்னி தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும்.

    பிறகு அடிவாரத்தில் அமைத்திருக்க கூடிய அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலையம்பாள் கோவிலில் தேர் திருவிழா நடைபெறும். பெரியசாமி சித்தர் திருவிழாவின் போது தலையில் தீபம் ஏற்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று யாசகம் பெற்று வருவார். அப்படி ஒருநாள் பெரியசாமி சித்தர் தலையில் தீபம் ஏற்றி யாசகம் பெற அருகில் உள்ள கிராமம் சென்றைடைந்தார். அவரை திருடர் என நினைத்து அவரை கட்டி வைத்து தீயிட்டு எரித்தனர். அப்போது தீயில் பெரியசாமி சித்தர் தலை மேல் உள்ள தீபம் மட்டும் எரிந்து கொண்டு இருந்தது என்று கூறப்படுகிறது.

    ஆச்சரியம் அடைந்த ஊர் பொது மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கூறி யாசகம் கொடுத்து அனுப்பி வைத்தனர். பிறகு சிறிது காலம் கழித்து சிவனின் திருவிளையாடல் போல் சம்பவம் நடை பெற்றது. பெரியசாமி சித்தர் தூங்கி கொண்டிருக்கும்போது 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருட முற்பட்டார்கள். அதை கண்ட சித்தர் ஓம் நமசிவாய என்று கூறினார். கூறிய உடன் அவர்களுக்கு பார்வை இழந்து அப்படியே அமர்ந்து விட்டார்கள். காலையில் ஊர் பொது மக்கள் வரும் போது சித்தர் எழுந்து அவர்களுக்கு பார்வை வர செய்து என் காலத்திற்கு அப்பறம் உங்கள் தலைமுறையினர் தான் அண்ணாமலையார் கோவிலின் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    அப்போதில் இருந்து அவர்கள் தலைமுறையினர்கோவிலில் பூஜை செய்து வருகின்றார்கள். ஊரில் மழை இல்லையென்று மக்கள் வேண்டினால் பெரியசாமி சித்தர் பூஜையினால்மழை வர செய்வார். அருகே உள்ள 18 கிராமங்களும் பெரியசாமி சித்தர் கூறியது போல திருவண்ணாமலை போல் காட்சி அளிப்பதால் அண்ணாமலைபுதூரை தென் திருவண்ணாமலை என்று அழைக்கிறார்கள்.

    கோவிலின் வலதுபுறம் பெரியசாமி சித்தரின் ஜீவசமாதி உள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தென் திருவண்ணாமலை என்று அழைக்க கூடிய அண்ணாமலைபுதூர் வந்து அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலையம்பாள் கோவிலை தரிசனம் செய்து வருகின்றனர்.

    பெரியசாமி சித்தருக்கு ஊத்துமலை ஜமீன் சிவன் மீது கொண்ட அன்பால் திருக்கோவில் கட்ட உதவியதாக கூறப்படுகிறது.

    செய்தியாளர்: சுப கோமதி

    Published by:Karthick S
    First published:

    Tags: Tenkasi