முகப்பு /தென்காசி /

தென்திருவண்ணாமலையான அண்ணாமலை புதூர் ஈஸ்வரனுக்கு வருஷாஅபிஷேகம்- திரண்ட பக்தர்கள்

தென்திருவண்ணாமலையான அண்ணாமலை புதூர் ஈஸ்வரனுக்கு வருஷாஅபிஷேகம்- திரண்ட பக்தர்கள்

X
அண்ணாமலை

அண்ணாமலை புதூர் கோவில்

Tenkasi | அண்ணாமலை புதூர் அண்ணாமலை ஈஸ்வரர் உடனுறை உண்ணாமலை அம்பாள் திருக்கோவிலில் வர்ஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது அண்ணாமலை புதூர். அண்ணாமலை புதூரில் அமைந்துள்ளஅண்ணாமலை ஈஸ்வரர் உடனுறை உண்ணாமலை அம்பாள் திருக்கோவிலில் வர்ஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும் மதியம் 12 மணிக்கு கும்பங்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் மக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலை ஈஸ்வரனின் அருளை பெற்றனர்.

மேலும் இந்த கோவில் அருகில் இருக்கும் மலையை பார்க்கும் போது திருவண்ணாமலை போல் தோன்றியதால் அந்த கிராமத்தில் சிவனுக்கு ஒரு கோவில் எழுப்பி அந்த ஊர் மக்களுடன் ஒன்றாக வழிபாட்டு வந்தார். இங்குள்ள மலையில் வருடத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளன்று 3,200 அடி உயரத்தில் அதாவது மலையின் உச்சியில் மிக பிரமாண்டமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

மாணவர்கள் இனி மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கவேண்டாம்- சங்கரன்கோவில் எம்.எல்.ஏ கொடுத்த வாக்குறுதி

அங்கே 7 கன்னி தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும். பிறகு அடிவாரம் அமைத்திருக்க கூடிய அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலை அம்பாள் கோவிலில் தேர் திருவிழா நடைபெறும்.

First published:

Tags: Local News, Tenkasi