ஹோம் /தென்காசி /

தென்காசி அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரியன்று நடக்கும் அதிசய நிகழ்வு!

தென்காசி அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரியன்று நடக்கும் அதிசய நிகழ்வு!

X
தென்காசி

தென்காசி அங்காளம்மன் கோயில்

Tenkasi District News : தென்காசி அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரி அன்று பானையின் விளிம்பில் வால்,வேல்,சூலம் நிற்கும் அதிசயம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூரில் அமைந்திருக்கிறது அங்காளம்மன் கோயில். இந்த கோயில் 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் கல்மண்டபம் சுமார் 90 ஆண்டுகள் பழமையானதாகும், உள் புறத்தில் அமைந்திருக்கும் கல்மண்டபம் சுமார் 145 வருடங்கள் பழமையானது என்று கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

பச்சை பசேலென வயல் வெளிகள் மத்தியில் அமைதியாகவும் அழகாகவும் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். 1989ல் அங்காளம்மன் திருக்கோயிலில் முதல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையும் படிங்க : குற்றாலத்துக்கு கிளம்பியாச்சா.. எந்த அருவிகளில் எல்லாம் தடை? தெரிஞ்சுட்டு போங்க!

மூலவர் அங்காளம்மன் ஆகவும், பேச்சியம்மன், விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத முருகன் ஆகிய தெய்வங்களும் இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன.

தபசு தம்பிரான், வியர்வை புத்திரன், இருளப்பசாமி, ஒண்டி வீரன், மாவு இசக்கி, பாம்பு சித்தன், கருப்பசாமி, போன்ற காவல் தெய்வங்களும் அமைந்திருக்கிறது சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த ஆலயத்தில் வந்து பேச்சி அம்மனுக்கு மஞ்சள் எண்ணெய் படைத்து வழிபடுவது வழக்கம்.

அப்படி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை அவ்வாறு பக்தர்களால் படைக்கப்பட்ட மஞ்ச எண்ணெயைத்தான் பூஜையின் பொழுது அம்மனுக்கு பயன்படுத்துவர்.

அந்த மஞ்ச எண்ணெயை ஊற்றிய இடமே பேச்சி அம்மனுக்கு பின்னல் மலை போன்று காட்சியளிக்கிறது. சிவராத்தி அன்று அங்காளம்மன் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவும், சிவராத்திரியின் மறுநாள் அதிகாலையில் அம்மன் சன்னதி முன் ஒரு பானையின் விளிம்பில் வாலாயுதம், வேலாயுதம் மற்றும் சூலாயுதம் ஆகியவை நிறுத்தி வைக்கப்படுமாம்.

முக்கால் கிலோ எடை கொண்ட மூன்று ஆயுதங்களும் அப்படியே நிற்குமாம். இப்படி ஒன்றே முக்கால் நாழிகை நிற்குமாம். இதை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவார் என்று இந்த கோயிலின் பூசாரி தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் சிவராத்திரிக்கு மறுநாள் சுடலை மற்றும் கருப்பு சுவாமிகளுக்கு கிடா வெட்டு கோலாகலமாக நடைபெறும். கீழப்பாவூரில் அமைந்திருக்கும் அங்காள அம்மன் திருக்கோவிலில், சிவராத்திரியில் பானை நுனியில் ஆயுதங்கள் நிற்கும் அதிசயத்தை சென்று தரிசித்து வாருங்கள்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi