முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கட்டிடங்கள் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கட்டிடங்கள் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு

சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Government Hospital in Sankarankovil | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு புதிதாக முன்னோடி மருத்துவ கட்டிடங்கள் கட்ட ரூபாய் 9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு புதிதாக முன்னோடி மருத்துவ கட்டிடங்கள் கட்ட ரூபாய் 9 கோடி ஒதுக்கி உள்ளதை தொடர்ந்து முதல்வருக்கும், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை பிரதானமாக இருந்து வருகிறது சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு பெரிதும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையால் பயன் பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ஒன்பது கோடி நிதி ஒதுக்கீட்டில் சங்கரன்கோவில் அரச மருத்துவமனையில் கட்டப்பட உள்ளது.

இது குறித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கூறியவை: சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் உதவியாக இருக்கும் எனவும், சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே இந்த உத்தரவிட்ட முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கும் நன்றி தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சென்று புத்தகங்களை வழங்கி நன்றி தெரிவித்தார் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi